மருத்துவம்
பிறசொற்கள் நீக்கப்படவில்லை
இணையத்திலிருந்து
சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை
இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை
மறையும்.நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே
அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.வெள்ளரிப் பிஞ்சில் எந்த
வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத்
தூண்டுகிறது.சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு
வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல்
தடுக்கும்.வாழைப்பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற
பல வகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால்
இதய அழுத்தம் ஏறாமல் சீராக
இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே
சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச்
சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.கீரையின் பொதுத் தன்மைகள்உடல்
தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப்
பெருக்கி, கோழை அகற்றி.மருத்துவப் பயன்கள்வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது
மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து
வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும்
குணமாகும்.வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்களை
ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளிகீரை கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி + சிறிது சீரகம் + ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு அதில்
தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே
குணமாகும்.காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் காங்கை
(சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும்.ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும்.
நீர்க்கடுப்பு, எரிச்சர் குணமாகும்.இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல்
தடவினாலும் ஆறிவிடும்.இலைச்சாற்றை சர்மம், தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் அவை
மறையும்.மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து குடித்து வர, காமாலை குணமாகும்.உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி
சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும்.வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும்.
கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை
எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல்தணியும்.மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.உடல்
எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 (அ) 10 நிமிடம் போட்டு எடுத்து 2 வெங்காயம் (அரிந்தது) + பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம் தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின்
சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்) குறையும்.
தக்காளி
இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம்
செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில்
தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து
விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து
வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான
அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி
சூப்பாக பருக முடியும்.குணப்படுத்தும் நோய்கள்:பருகினால் வாய் கிரந்தி வேக்காடு வராது
வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக