உலகத் தமிழ்மாநாடு
இலங்கையில் தமிழ்மக்கள் தாங்க இயலாத் துன்பத்துள் இருக்கும் போது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தக்கூடாது ஏன்று சிலர் கூறுகின்றனர். பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கழகம் ஒப்புதல் தராமல் நடத்தக்கூடாது என்றெல்லாம் மறுப்புக் கூறுகின்றனர். இக்கூற்றுகளில் உண்மை ஈருப்பது உண்மைதான்.
இவையெல்லாம் வெறுப்பால் சொல்லப்படுவன. மாநாடு நடத்தாவிட்டால் இலங்கைத் தமிழர் துன்பம் தீர்ந்துவிடுமா? மாநாட்டை மறுப்பவர்கள் இலங்கைத் தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் பெருந் துன்பங்களைக் களைய உலக அளவில் தங்கள் வலிமையைப் பயன்படுத்தி என்ன முயற்சிகளைச் செய்தார்கள்? தேர்தல் முடிந்தபின்னர் என்ன செய்கின்றனர்? தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கைச் சிக்கலில் அக்கறை இல்லை என்பது போன்ற காட்சிகளைத்தான் தங்கள் தோல்வி வாயிலாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இன்று கூட அவர்களுக்காக எவ்வளவோ செய்யலாம்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தவேண்டும் என்னும் முடிவை 14 ஆண்டுகளாகச் செயற்படுத்த இயலாத நெபுரு கரசிமா தொடர்ந்து பதவியில் இருக்கலாமா? மாநாடு நடத்த ஒப்புதல் தர மறுப்பதால் அவர்க்கு என்ன நன்மை? இப்போதாவது நடத்த வாய்ப்பும் அரசும் கிடைத்திருக்கிறதே ஏன்று மகிழ்ந்து மனமுவந்து ஒப்புதல் தந்திருக்க வேண்டாவா?. சரி.
இந்த மாநாடு கடந்த 60ஆண்டுகளாகத் தமிழுக்குச் செய்யப்படாமல் விடுபட்ட எல்லாப்பணிகளையும் செய்துமுடிக்கவேண்டும். இல்லையென்றால் பழிமலையின் கொடுமுடியாக இது அமைந்துபோகும்.
உணர்வூட்டல், காத்தல், வளர்த்தல், உயர்த்தல், பரப்பல் என்னும் 5 பணிகளையும் இம்மாநாடு செய்யட்டும். பகட்டும் தற்புகழ்ச்சியும் உண்மைத் தமிழ்அறிஞர் தவிர்ப்பும் இகழ்ச்சியைக் கொடுத்துவிடும்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார்.
க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி- 605009 0413-2247072
ஞாயிறு, 1 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
vaazhga!
பதிலளிநீக்கு