இதுவா காதல்?
காதலும் இதுவோ? ஏங்கும்
கட்டிளம் மேனி காட்டிப்
போதலும் வரலு மாகப்
பொய்கையில் ஆடு கின்றார்.
தீதலால் இந்தக் காதல்
திரையினுக் கழகும் ஆமோ?
தோதினி ஓன்றைக் கண்டே
தொலைக்கவே முயலு வீரே.
நடக்கிற பாதை தன்னில்
நாட்டியம் ஆடிக் கொண்டு
கிடக்கிற காதல் செய்யக்
கீழ்மகள் உடைஅ விழ்ப்பாள்.
மடயராய்ப் பாடிக் கொண்டு
மார்பினை ஆட்டு வார்கள்.
உடும்பெனத் தொடையைக் காட்டி
உருளுதல் காதல் தானா?
நொடிக்கொரு உடையை மாற்றி
நோவிலா தோடி யாடி
அடிக்கொரு இடத்தை மாற்றி
அணைப்புடன் பொது விடத்தில்
கொடியிடைப் பெண்கள் சூழக்
குப்புற மேல்ப டுத்துப்
பிடித்திடை புரண்டே ஆடல்
பித்தரே காதல் தானா?
வெட்கமோ எவர்க்கு மில்லை
வீரமோ சிறிது மில்லை
மட்கிய காதல் செய்ய
மழையினில் புரளு வார்கள்
நட்பினால் காத லீயை
நாலுபேர் பகிர்ந்து கொள்வர்,
தட்பமும் காய்வ தற்காய்த்
தவறுதல் காதல் தானா?
அறுசீர்மண்டிலம் 10/5/09 by அ. பசுபதி Delete
Edit View
ஞாயிறு, 1 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக