பிரபலமான இடுகைகள்

Translate

ஞாயிறு, 1 நவம்பர், 2009

உலகத் தமிழ்மாநாடு

இலங்கையில் தமிழ்மக்கள் தாங்க இயலாத் துன்பத்துள் இருக்கும் போது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தக்கூடாது ஏன்று சிலர் கூறுகின்றனர். பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கழகம் ஒப்புதல் தராமல் நடத்தக்கூடாது என்றெல்லாம் மறுப்புக் கூறுகின்றனர். இக்கூற்றுகளில் உண்மை ஈருப்பது உண்மைதான்.
இவையெல்லாம் வெறுப்பால் சொல்லப்படுவன. மாநாடு நடத்தாவிட்டால் இலங்கைத் தமிழர் துன்பம் தீர்ந்துவிடுமா? மாநாட்டை மறுப்பவர்கள் இலங்கைத் தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் பெருந் துன்பங்களைக் களைய உலக அளவில் தங்கள் வலிமையைப் பயன்படுத்தி என்ன முயற்சிகளைச் செய்தார்கள்? தேர்தல் முடிந்தபின்னர் என்ன செய்கின்றனர்? தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கைச் சிக்கலில் அக்கறை இல்லை என்பது போன்ற காட்சிகளைத்தான் தங்கள் தோல்வி வாயிலாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இன்று கூட அவர்களுக்காக எவ்வளவோ செய்யலாம்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தவேண்டும் என்னும் முடிவை 14 ஆண்டுகளாகச் செயற்படுத்த இயலாத நெபுரு கரசிமா தொடர்ந்து பதவியில் இருக்கலாமா? மாநாடு நடத்த ஒப்புதல் தர மறுப்பதால் அவர்க்கு என்ன நன்மை? இப்போதாவது நடத்த வாய்ப்பும் அரசும் கிடைத்திருக்கிறதே ஏன்று மகிழ்ந்து மனமுவந்து ஒப்புதல் தந்திருக்க வேண்டாவா?. சரி.
இந்த மாநாடு கடந்த 60ஆண்டுகளாகத் தமிழுக்குச் செய்யப்படாமல் விடுபட்ட எல்லாப்பணிகளையும் செய்துமுடிக்கவேண்டும். இல்லையென்றால் பழிமலையின் கொடுமுடியாக இது அமைந்துபோகும்.
உணர்வூட்டல், காத்தல், வளர்த்தல், உயர்த்தல், பரப்பல் என்னும் 5 பணிகளையும் இம்மாநாடு செய்யட்டும். பகட்டும் தற்புகழ்ச்சியும் உண்மைத் தமிழ்அறிஞர் தவிர்ப்பும் இகழ்ச்சியைக் கொடுத்துவிடும்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார்.

க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி- 605009 0413-2247072
இதுவா காதல்?



காதலும் இதுவோ? ஏங்கும்
கட்டிளம் மேனி காட்டிப்
போதலும் வரலு மாகப்
பொய்கையில் ஆடு கின்றார்.
தீதலால் இந்தக் காதல்
திரையினுக் கழகும் ஆமோ?
தோதினி ஓன்றைக் கண்டே
தொலைக்கவே முயலு வீரே.



நடக்கிற பாதை தன்னில்
நாட்டியம் ஆடிக் கொண்டு
கிடக்கிற காதல் செய்யக்
கீழ்மகள் உடைஅ விழ்ப்பாள்.
மடயராய்ப் பாடிக் கொண்டு
மார்பினை ஆட்டு வார்கள்.
உடும்பெனத் தொடையைக் காட்டி
உருளுதல் காதல் தானா?


நொடிக்கொரு உடையை மாற்றி
நோவிலா தோடி யாடி
அடிக்கொரு இடத்தை மாற்றி
அணைப்புடன் பொது விடத்தில்
கொடியிடைப் பெண்கள் சூழக்
குப்புற மேல்ப டுத்துப்
பிடித்திடை புரண்டே ஆடல்
பித்தரே காதல் தானா?


வெட்கமோ எவர்க்கு மில்லை
வீரமோ சிறிது மில்லை
மட்கிய காதல் செய்ய
மழையினில் புரளு வார்கள்
நட்பினால் காத லீயை
நாலுபேர் பகிர்ந்து கொள்வர்,
தட்பமும் காய்வ தற்காய்த்
தவறுதல் காதல் தானா?



அறுசீர்மண்டிலம் 10/5/09 by அ. பசுபதி Delete
Edit View
யாருமில்லை!

(பாடல்- எண்சீர் மண்டிலம்)

க.தமிழமல்லன்,
சிறப்பாசிரியர்,
'வெல்லும் தூயதமிழ்' - மாதஇதழ்
தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி 605009.


தீக்குளித்தார் பட்டினிப்போர்
செய்தார் நாட்டில்
திரும்புகின்ற இடமெல்லாம்
மக்கள் எங்கும்
நாக்குழறத் தமிழ்ஈழ
வாழ்த்துச் சொன்னார்.
நன்றாகக் கைகோத்தே
ஆணும் பெண்ணும்

போக்குவரத் தார்எல்லாம்
பார்க்கும் வண்ணம்
பொழிமழையில் பொன்மேனி
நனையு மாறு
நீக்கமற நின்றிருந்தார்
கடைகள் மூடி
நிலைகுலைய வாழ்க்கைதான்
அடைப்புச் செய்தார்.

தலைவர்கள் எல்லாரும்
தம்மா லான
தமிழ்ஈழப் போராட்டம்
நடத்தி ஓய்ந்தார்
நிலைமாறும் சிலதலைவர்
தாமும் வந்து
நெடிதான ஊணர்ச்சிகளை
மிகவாய்க் காட்டிச்

சிலையாக வீற்றிருந்தார்
உண்ணாப்போரில்
சிறுத்தைபோல் வேங்கைபோல்
புலிக ளைப்போல்
விலைசொல்ல இயலாத
இளைஞர் எல்லாம்
விண்ணுயர ஈகத்தைச்
செய்த யர்ந்தார்

புற்பரப்பில் இறைத்திட்ட
நீரைப் போலப்
போராட்டம் எல்லாமும்
ஓய்ந்த தையா
கற்பரப்பில் சிந்தியஆ
நெய்யைப் போலக்
களப்பணிகள் கைவிட்டுப்
போன தையா
நெற்பயிரை விலங்குக்குத்
தீனியாக
நீட்டல் போல் நெடும்போர்கள்
நின்ற தம்மா.

கற்குருதி இராசபச்சன்
வெறிக்கொலைஞன்
கல்மனத்தை உடைப்பதற்கு
யாருமில்லை..

2008


மொழிபெயர்ப்பு பேரா.கணபதி

None There Is!


Self -immolations they committed,
And protest fast they conducted
People everywhere greetings gave to Eelam Tamils
Till their throats turned hoarse!

Men and women firmly held their hands together
To let all the onlookers see them,
Standing in proximity close,
Their bodies drenched in dripping rains!
All the shops were closed,
And life was brought to a stunning stand -still!

All the leaders, as for as they could,
Agitated for Eelam Tamils, and rested.
Some leaders who easily change their stand
Came to deeply demonstrate their passions high,
And Like idols the protest fast they adorned!
Like leopards, lions and tigers,
Many cherished youths immense sacrifices made.

Oh! Like water wasted on a grassy stretch,
Disappear did all the protests!
Oh! Like butter spilt on rock
Gone was all the field-work!
Like ears of corn as folder to animals extended,
The prolonged wars had ended
To break the stony heart of murderous Rajapakshe,
None now there is!
Like Warriors

- Ka.Thamizhamallan
Editor, ‘Vellum ThUya Thamizh,’
Thalaivar, Thaniththamizh Iyakkam,
Puducherry – 605 009

Like the environment being protected
Do exort,the word should be protected
Like valuing keenly a thing being sold
Do love and cherish the glorious word

Like an encircling wall built
Do guard the benefits of the word
Like an infection’s menace being prevented
Do prevent the stealthy entry of alien words.

Like the voice being raised for women’s rights
Do raise your voice for famed Tamil
Like eyes being tended with care
Do deeply favour Pure Tamil

Like the land being defended by the Warriors
Do stoutly defend the honour of Tamil
Like songs in Tamil being broadcast through FM waves
Do not destroy ancient Tamil.

Like a walk for fat being reduced
Do let all-embracing Tamil walk
Like blood’s pressure being carefully seen
Do let mother Tamil be examined

Like worms and insects being weeded out
Do contemplate on weeding out foreign words
Like bathing for dirt being removed
Do remove the dirt of alien words.

-Translated by Prof. R.Ganapathy 9/15/09 by அ. பசுபதி Delete
Edit View சமச்சீர் கல்வி
தமிழ்நாட்டில் சமச்சீர்கல்வி வரும்ஆண்டில் 1, 6 ஆகிய வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப் படுகிறது. அக்கல்வியில் தமிழும் பிற மொழிகளும் பயிற்று மொழிகள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கல்விக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த இது ஓரளவு உதவலாம். அதுவும் அந்நிறுவனங்களின் போராட்டத்திற்குப்பின் என்னாகும் என்று பார்த்த பின்தான் முடிவுசெய்தல் வேண்டும்.

ஆயினும் தமிழும் பிறமொழிகளும் பயிற்றுமொழிகள் என்பது வேப்பங்காயாய்ப் பாகற்காயாய் எட்டியாய் கசக்கின்றது. திரவிட இயக்கத்தின் தோல்வியாகத்தான் இந்த அறிவிப்பைக் கொள்ள வேண்டும். தமிழ்மட்டும் பயிற்று மொழி. அடிப்படைக் கல்விமுதல் ஆய்வுக்கல்விவரை தமிழே பயிற்று மொழி என்பதுதான் கல்விக் கொள்கை வகுத்த காந்தியடிகள் முதல் மாண்டிசோரி வரை கூறியிருக்கிறார்கள்.ஆனால் பல மொழிகளுக்கு வழிவிடுதல் தமிழ்இனம் மேலும்மேலும் அடிமைப்பட்டு அழிந்துபோகத்தான் வழி செய்யும்.

தமிழில் படித்தால் தான் வேலை என்னும் அறிவிப்பைச் செய்து அத்துடன் பயிற்றுமொழி தமிழ்மட்டுமே என்று த.நா. அரசு சொல்லும் நாளே பொன்னாள்.

- க.தமிழமல்லன்
தலைவர்
தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன் கோயில் தெரு,
தட்டாஞ்சாவடி,
புதுச்சேரி - 605 009. 9/15/09 by அ. பசுபதி Delete

1 – 11 of 11