பிரபலமான இடுகைகள்

Translate

வெள்ளி, 18 மே, 2018

பாவேந்தரும் தமிழியக்கமும் முனைவர் க.தமிழமல்லன்


பாவேந்தரும் தமிழியக்கமும்
முனைவர் க.தமிழமல்லன்
முத்துக் கடலின் மூளும் ஆற்றல்                                                     கொத்துக் குண்டின் குன்றா வலிமை!                                                  எரிமலை கக்கும் இணையிலா வெப்பம்,   
வரிப்புலிச் சீற்றம் அரிமாப் பெருமிதம்!                                      அனைத்தும்நிறைந்த அடுக்கிடி முழக்கம்                                               முனைப்பாய் பாவேந்தர் மூள்தமிழ் இயக்கம்! 
அறுசீர் மண்டில அழகிய யாப்பால்,                                                      உறுதமிழ் நலமெலாம் உடனே விளைந்திடப்                                     படைத்தது, படைக்கலம் போன்றது! பகைத்திறம்                               
உடைத்தே, உயிர்த்தமிழ் காத்தது! பாட்டின்                                                வேந்தர் வில்லின் கணையாய் விளைத்தது!                                              மாந்தர் யாவரும் மண்தமிழ் காக்கத் 
துாண்டித் துாய்தமிழ் துலங்கிட வைத்தது!                                     
வேண்டிய மாற்றம் விளைந்த(து)! அதனால்,                               
மார்க்சின் முதல்நுால் மாற்றம் தந்தது,                                           வேர்த்தமிழ் காக்கும் விளைதமிழ் இயக்கம்                                        அளித்தது! அதனால் அன்னைத் தமிழின் 
இளிவெலாம் தொலைந்தது! இங்குள கடைகள் 
பெயரெலாம், தனித்தமிழ் பேசிட வைத்தது!                                   
உயர்தமிழ்த் திருமணம் உருப்பட வைத் தது!                                                

பாட்டுத் தமிழும் பண்சிறந் தொளிர்ந்தது!                                            வேட்டு வைத்தது வேற்றின வேரிலே! 27.3..2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக